Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

பெருந்தோட்ட பாடசாலைக்கான ஆசிரியர் நியமனத்தில் பல குளறுபடிகள் மக்கள் ஆசிரியர் சங்கம்


பெருந்தோட்ட பாடசாலைக்கு வழங்கப்பட இருந்த 3026 ஆசிரியர் உதவியாளர்கள் நியமனங்களில் 1688 நியமனங்கள் மாத்திரமே 08.05.2015ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளன. இதில் மீதமுள்ள நியமனங்கள் வழங்கப்படுமா, அப்படி வழங்கப்படுமாயின் எப்போது வழங்கப்படும் என்பது தொடர்பில் கல்வி அமைச்சோ கல்வி இராஜாங்க அமைச்சோ உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை. அத்தோடு போட்டிப் பரீட்சையில் சித்தியெய்தி நேர்முகப் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகள் பரீட்சையில் பெற்ற புள்ளிகள் இதுவரை வெளியிடப்படாமை நியமனங்களின் வெளிப்படைத் தன்மை பற்றிய கேள்வியை எழுப்பியுள்ளது. நியமனங்கள் வழங்குவதற்கு முன்னர் புள்ளிகள் வழங்கப்படும் என்று கூறியிருந்த போதும் அதுவும் இடம்பெறவில்லை. ஆசிரிய உதவியாளர்கள் என்ற பேரில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு வெறும் ரூபா. 6000ஃஸ்ரீ மாத்திரமே மொத்த மாத கொடுப்பனவாக வழங்குகின்றமை எவ்வகையிலும் ஏற்று கொள்ளப்பட முடியாது. ஆசிரியர் உதவியாளர்கள் என்ற இந்த நியமனமானது ஆசிரியர் சேவை பிரமாண குறிப்பின்படி ஆசிரியர் சேவையின் தரம் 3-iறை;கு  தேவையான தகைமைகள் கொண்டவர்களுக்கு ஆட்சேர்ப்பிற்கு விதிக்கப்பட்ட முறைகளை பின்பற்றியே வழங்கப்படுகிறது பொதுவாக ஆசிரியர்கள் செய்யும் அதே பணிகளையும் கடமைகளையுமே இவர்களும் செய்ய போகின்றனர். எனினும் அவர்களுக்கான தொழில் கௌரவம் மறுக்கப்பட்டுள்ளது. எனவே நியமனம் பெறுபவர்கள் ஆசிரியர் சேவை தரம் 3- ஐஐற்கு உள்ளீர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு இடம்பெறாவிடின் அது சட்ட விரோதமானதும் பாரபட்சமானதுமாகும். எனவே இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க நியமனம் பெற்றவர்களும் நியமனம் பெற இருப்பவர்களும் ஆசிரியர்களும் தயாராக வேண்டும் என்று மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர். நெல்சன் மோகன்ராஜ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

பெருந்தோட்ட தமிழ் மொழிமூல பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு பாடசாலைகளை அடிப்படையாக கொண்ட நியமனம் தொடர்பாக வெளியிட்டுள்ள அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

கல்வியில் பின்தங்கியுள்ள சமூகம் என்ற வகையில் விசேட எற்பாடுகளின் அடிப்படையில் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்படும் ஆசிரியர் நியமனங்கள் மலையக அரசியல் தலைவர்கள் என்போரால் தாம் பெற்றுக் கொடுத்ததாக கூறப்பட்டு வருகின்றது. எனினும் பெருந்தோட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நீண்டகால நோக்கில் தீர்க்கும் விதமாமான ஏற்பாடுகளுடன் ஆட்சேர்ப்பிற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட முடியாத நிலையிலேயே அரசியல் தலைமைகளின் வழிகாட்டலும் அதிகாரிகளின் செயற்பாடுகளும் அமைந்திருக்கின்றன. பெருந்தோட்ட பாடசாலைகளுக்க நியமனம் பெறுவதில் அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கும் அதேநேரம் பெருந்தோட்டங்களில் உள்ள தகுதியுடையோருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான விளக்கமும் அறிவும் அற்றவர்களாகவே இந்த நியமனம் எங்கள் ஆட்சி காலத்தில் வந்தது என மார்தட்டிக் கொள்ளும் மலையக தலைமைகள் அன்று இருந்தனர். அத்தோடு ஆசிரியர்களுக்கான உரிய கௌரவத்தை வழங்கும் வகையில் சம்பள உரிமைகளை உறுதி செய்யவும் அவர்கள் செயற்படவில்லை. தற்போது ஆட்சியில் இருக்கும் மலையக அரசியல் தலைமைகளும் இதில் அசமந்தமாகவே செயற்பட்டு வருகின்றனர். 

எனவே, பெருந்தோட்ட தமிழ் பாடசாலைகளுக்கு வழங்கப்பட வேண்டிய மிகுதி ஆசிரியர் நியமனங்களை எவருக்கும் பாரபட்சம் இன்றியும் பெருந்தோட்ட தமிழ் பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நீண்ட கால அடிப்படையில் நிவர்த்திக்கும் வகையில் வழங்க உரிய நடவடிக்கையை கல்வி மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சு எடுக்க வேண்டும். ஆசிரிய உதவியாளர்கள் என்றிலாமல் நியமனம் வழங்கப்பட்டுள்ள, வழங்கப்படவுள்ள அனைவரையும், 2007ஆம் ஆண்டு நியமனம் போன்று ஆசிரியர் சேவை தரம் 3-iறை;கு அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பதுளையில் பாதுகாக்கப்படும் வரலாற்று நினைவு சின்னம் - பதுளை ராகுலன்


பதுளையின் செழுமை அறிந்ததே. அதற்குக் காரணம் பதுளையை சுற்றியுள்ள, கண்களுக்கு குளிர்ச்சியான பச்சைப்பசேலென பரந்து விரிந்துள்ள தேயிலை தோட்டங்கள் மட்டுமல்ல, அவை தரும் சிலுசிலுப்போடு கூடிய மாலை நேரத்து தென்றலும் என்றால் அது மிகையாகாது. ஆனால் இவற்றையெல்லாம் மிஞ்சியும் விஞ்சியும் அங்கு காணப்படும் வரலாற்று ஆவணங்களும் சின்னங்களும் பதுளை மக்களுக்கே தெரியாத அவர்கள் அறிந்திராத பொக்கிஷமாகத் தான் அண்மைக் காலம் வரை பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றது.

அப்படியாகப் பாதுகாத்து வைக்கப்பட்ட ஒரு வரலாற்று ஸ்தூபி அல்லது சின்னம், கல்வெட்டு என்று எந்தப் பெயராலும் அழைக்கப்படக்கூடிய ஒரு நினைவு சின்னம் தற்போது பதுளை செனரத் பரணவித்தாரண பொதுநூல் நிலையத்தில் (வீல்ஸ்பார்க் அருகில் உள்ள பொது நூல் நிலையம்) மிகவும் நேர்த்தியாக வைக்கப் பட்டிருக்கின்றது. இந்த வாசிகசாலைக்கு வரும் வாசகர்கள் வெறுமனே பத்திரிகைகளைப் பார்த்து விட்டும், புத்தகங்களை வாசித்து விட்டும் போவோறாகவே இருக்கின்றனர். இந்த வரலாற்று சின்னத்தைப் பற்றி அறிந்துகொள்ள எந்த ஆர்வமும் காட்டுபவர்களாக காணப்படவில்லை.

இந்த வரலாற்று சின்னம் பற்றிய நூல்கள் அங்கு காணப்படுகின்றன. மேலும் இந்த ஸ்தூபி பற்றிய துண்டுப் பிரசுரங்கள் வாசகர்கள் கேட்கும் பட்சத்தில் வாசிகசாலை உத்தியோகத்தர்களினால் இனாமாக வழங்கப்படுகின்றன. மேலும் முக்கியமாக உதய ஆர்.தென்னகோன் என்ற வரலாற்று ஆசிரியரால் எழுதப்பட்ட Badulla Piller Inscription. 10th. Century and rereading என்ற நூலில் இந்த நினைவுச் சின்னம் பற்றிய சகலவிதமான விபரங்களும் கொடுக் கப்பட்டிருக்கின்றன.

மகியங்கனையில் ஈசானமூலையில் 3ஆவது மைல் தூரத்தில் அமைந்துள்ளது "ஹறபர" என்ற வாவி. இந்த வாவிக்கருகில் இருந்து 10ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டிருந்த இந்த வரலாற்று ஸ்தூபியை 1857 ஆம் ஆண்டில் பதுளை உதவி அரசாங்க அதிபராக இருந்த ஜோன்பேலி என்பவர் பதுளைக்கு கொண்டுவந்தார். இப்படி கொண்டுவரப்பட்ட நினைவு சின்னம் அண்மைக் காலம் வரை பதுளை கச்சேரிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட போதும், கச்சேரிக்கு வரும் மக்களோ அன்றி பதுளை மக்களோ இந்த சின்னம் குறித்து பெரிதாக எந்த ஒரு ஆர்வமும் காட்டவில்லை.

அதற்குப்பின் பதுளை நகரத்தில் காணப்பட்ட அபிவிருத்தி மற்றும் பாதைகள் விஸ்தரிப்புகளின் காரணமாக இந்த நினைவு சின்னம் பதுளை வாசிகசாலை யில் இடம்பிடித்தது. பல கற்றறிவாளர்கள் (Intellectuals) வந்து போகும் இடமான வாசிகசாலைதான் இந்த நினைவு ஸ்தூ பிக்கு உகந்த இடமாகக் காணப்படுகின்றது. 10ஆம் நூற்றாண்டில் பதுளை, மகியங்கனை பகுதிகளை ஆண்ட மன்னனாகிய 3ஆம் ஸ்ரீ சங்கபோதி உதய மன்னனின் விருப்பப்படி இந்த ஸ்தூபி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்தூபியில் 10ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையில் பயன்பாட்டிலிருந்த மொழியின் எழுத்து உருவைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த ஸ்தூபியின் உயரம் 8அடி 5அங்குலம்.

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்று கல்வெட்டுகளும், ஸ்தூபிகளும் சுமார் 4000 வரை இருக்கின்றன. இவற்றுள் மிக உயரமான கல்வெட்டாகவும் மிகச் சிறிய எழுத்துக்களாலான கல்வெட்டாகவும் இந்த ஸ்தூபி காணப்படுகின்றது. இவை 2000 எழுத்துகளை கொண்ட 203 வரிகளாலானது. இந்த கல்வெட்டு சமூகம், பொருளாதாரம், அரசியல் சம்பந்தமான பல ஒழுங்கு முறைகளையும், நெறிகளையும் உள்ளடக்கியுள்ளது. அத்துடன்,

1) 10ஆம் நூற்றண்டின் இலங்கையின் கிராமிய சமூக அமைப்பு.

2) 10ஆம் நூற்றண்டின் உள்நாட்டு வியாபாரக் கட்டமைப்பு.

3) அரச ஒழுங்கமைப்பு சம்பந்தமான விபரங்கள்.

4) நீதித்துறை சம்பந்தமான ஒழுங்கு முறைகளும், அதிகாரிகளுக்கான அதிகார எல்லைகளும்.

5) சமூக பழக்க வழக்கங்களும் அவற்றை பேணுவதற்கான நடை முறைகளும்.

6) 10ஆம் நூற்றாண்டின் மொழி மற்றும் எழுத்து சம்பந்தமான விபரங்களும், அரச நீதிகளும், கட்டளைகளும்.

இவைகள் அனைத்துமே 3ஆம் ஸ்ரீ சங்கபோதி உதய மன்னனின் அரச கட்டளைகள் என்ற மிகப் பெரிய அதிகாரத்தை கொண்டிருந்ததால் அதனை ஏற்க மறுப்பதோ, மீறி நடப்பதோ ராஜ துரோகமாகவே கணிக்கப்பட்டது. அப்படி மீறி நடப்பவர்களுக்கான தண்டனையும் கூட இந்தக் கல்வெட்டில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. அன்றைய காலகட்டங்களில் இன்றைய நாட்களைப் போலவே சட்ட விரோதமாக மரங்களை வெட்டி சாய்ப்பது, காலம் காலமாக நிகழ்ந்து வரும் மண்ணுக்கு செய்யப்படும் துரோகமாகவே கணிக்கப்பட்டாலும் கூட அதனைக் கட்டுப்படுத்துவது பல அரசாங்கங்களுக்கு கைகூடாத காரியமாகத்தான் இருந்து வந்துள்ளது. "மண் செழிப்புற்றால் தான் மரங்கள் செழிப்பாக வளரும்; மரம் செழிப்புற்று வளர்ந்தால் தான் மக்கள் செழிப்புற வாழ முடியும்" என்ற சாதாரண அறிவியலைக் கூட உணர முடியாத மக்கள் மரங்களை வெட்டுவதையும் அவற்றை "ஹோ ..." என்று மண்ணில் சாய்ப்பதையும் ஒரு வணிகமாகவே கொண்டுள்ளார்கள்.
10ஆம் நூற்றாண்டில் மகியங்கனையிலுள்ள 'ஹோபிட்டிகம' என்ற கிராமத்தில் சட்ட விரோதமாக மரங்கள் வெட்டப்படுவதாகவும், அவைகள் பலகைகளாக விற்கப்படுவதாகவும் 3ஆம் ஸ்ரீ சங்கபோதி உதய மன்னருக்கு இரகசிய செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து மன்னர், மரங்களை வெட்டுவோர் மீது நடவடிக்கைகள் எடுக்கவும், மரங்கள் வெட்டுதலை தடுக்கவும் மிகவும் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தார். இந்த உத்தரவுகளை பின்பற்றி நடக்காதோர் மீது கடுமையான தண்டனைகள் வழங்கவும் தீர்மானித்தார். இந்த தீர்மானங்களை இந்தக் கல்வெட்டில் எழுதி மக்களின் பார்வைக்கும் வைத்தார். இந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள மற்ற சில சட்டம் சம்பந்தமான விடயங்களும், சில தண்டனைகளும் இதில் தெளிவாக பொறிக்கப்பட்டிருக்கின்றன.

1) மக்கள் பிரதிநிதிகளால் விசாரிக்கப்பட்டு ஒருவருக்கு விதிக்கப்படும் தண்டப் பணத்தினை மாத்திரமே அதிகாரிகள் அறவிடவேண்டும்.

2) ஒரு கிராமத்தை சுற்றி வளைத்து பலாத்காரமாக தண்டப் பணத்தினை அறவிடக் கூடாது. அதிலும் முக்கியமாக தண்டனை பெற்றவரைத் தவிர அவரது மனைவி மக்களை கைது செய்யக் கூடாது.

3) தண்டனை பணத்தை அறவிடும் அரசு அதிகாரிகள் மது, இறைச்சி, தயிர், நெய் போன்றவற்றை தண்டனை பெற்றவர்களிடமி ருந்து பெற்றுக்கொள்ளக் கூடாது.

4) போயா தினங்களில் வியாபாரம் செய்பவர்கள் விளக்குப் பூஜைக்காக மகியங்கனை பௌத்த விகாரைக்கு குறிப்பிட்டுள்ள அளவு எண்ணெய் கொடுக் கவேண்டும். அதன் மூலம் தீப விளக்குகள் ஏற்றப்பட வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளார்கள்.

5) தண்டப்பணத்தை அறவிட நியமிக்கப்பட்டுள்ள அரச அதிகாரிகள் ஊர் மக்களுக்கு எந்த தொல்லையும் கொடுக்கக்கூடாது.
6) வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோர் அரச அதிகாரிகளால் அனுமதிக்கப்படாத நிறுவை உபகரணங்களை (தராசுகளை) பயன்படுத்தக் கூடாது.

7) வெற்றிலை, பாக்கு போன்ற புனிதமான பொருட்களை விற்கும்போது அவற்றை சுத்தமான மேடைகளில் மட்டுமே வைத்து விற்பனை செய்யவேண்டும்.

8) பௌத்த விகாரைகளுக்கு சொந்தமாக இருக்கும் காணிகளில் உள்ள மரங்களை வெட்டிசாய்க்கக் கூடது என்பது தடை செய்யப்பட்ட முக்கியமான அம்சங்களாகும்.

9) குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஒவ்வொரு விதமான தண்டப்பணம் வசூலிக்கபட வேண்டும். அரச அதிகாரிகள் குறிப்பிடப்பட்டுள்ள தண்ட பணத்துக்கு மேலதிகமாக வசூலிப்பர்கள் என்றால் அவர்களுக்கும் தண்டனை உண்டு. அரச அதிகாரிகளுக்கான தண்ட னையும் இந்தக் கல்வெட்டில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது.

மேலும் சிறப்பான வரலாற்று சான்றாக திகழும் இந்தக் கல்வெட்டைப் பற்றிய எந்த ஒரு விபரமும் தமிழில் இல்லாதது பெருங் குறையாகத்தான் தோன்றுகின்றது. இதனை கருத்தில் கொண்டு பதுளையை சேர்ந்த தமிழ் அறிஞர்களோ அன்றி தமிழ் தலைவர்களோ இந்த சரித்திர ஸ்தூபி பற்றிய தெளிவான ஒரு கையேட்டை தயாரிக்கும் பணியினை மேற்கொண்டு வாசகர்களின் பார்வைக்கு வைத்தால் சரித்திரம் கற்கும் தமிழ் மாணவர்களுக்கு மட்டுமல்ல, சர்வகலாசாலையில் வரலாறு கற்கும் தமிழ் மாணவர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.


நன்றி - வீரகேசரி

மலையகத்தில் வரலாற்று திருப்புமுனை! 10ம் திகதி 300 தனி வீடுகளுக்கு காணி உறுதி!


மலையகப் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ´சொந்தக்காணியில் தனிவீடு´ எனும் அரசியல் கோரிக்கையின் அடிப்படையில் புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட்டுள்ள 300 வீடுகளுக்கான காணியுறுதிப்பத்திரங்கள் எதிர்வரும் 10ம் திகதி வழங்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ஊடகப்பிரிவு விடுத்திருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் மே 10ம் திகதி தலவாக்கலையில் நடைபெறவுள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஐம்பதாண்டு நிறைவைக் கொண்டாடும் பொன்விழா ஆரம்ப நிகழ்வு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பங்குபற்றுதலோடு இடம்பெறும் இவ்விழாவில் மேற்படி 300 வீடுகளுக்கும் மற்றும் மீரியபெத்தையில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் 75 வீடுகளுக்கும் காணியுறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன. 

மீரியபெத்தை மக்களுக்கான வீடமைப்புத்திட்டம் 

மீரியபெத்தையில் இடம்பெற்ற மண்சரிவு அவலத்தில் பாதிப்புற்ற 75 குடும்பங்களுக்கான வீடமைப்புக்கான அடிக்கல் கடந்த அரசாங்கத்தினால் இடப்பட்டது. எனினும் அப்போது வீடமைப்புக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த இடம் மக்களின் விருப்புக்கும் வசதிக்கும் அமைய இடம்பெறவில்லை என எழுந்த சர்ச்சையை அடுத்து புதிதாக உருவாக்கப்பட்ட தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு புதிய இடத்தினைத் தெரிவு செய்து தற்போது 75 வீடுகளை நிர்மாணித்து வருகிறது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஆலோசனை வழிகாட்டலோடு இலங்கை இராணுவத்தினரால் கட்டுமாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் 300 வீடுகள் 

மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கான தனி வீடுகளின் தேவை சுமார் 160000 என அடையாளம் காணப்பட்டுள்ளது. எனினும் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மாதிரி வீடுகளாக 300 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த 300 வீடுகளும் மண்சரிவு, மண்சரிவு அபாயம் மற்றும் தீயபாயத்திற்கு உட்பட்ட வீடுகள் என அடையாளம் காணப்பட்டு தெரிவுசெய்யப்பட்டுள்ளன. 

இத்தகைய ஆபத்து உள்ள வீடுகள் என சுமார் 5600 வீடுகள் தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவற்றில் இருந்து 300 வீடுகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவு செய்யம்போது மலையக மாவட்டங்கள் தோறும் பரவலாக வீட்டுத்திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். 

அபாயம் காரணமாக மக்களுக்கு நன்கொடையாக இந்த வீடுகள் வழங்கப்படுகின்றன. நுவரெலியா மாவட்டம் (மஸ்கெலியா – மொக்கா, சாமிமலை- லெட்புரூக், நோர்வூட்- சென்ஜோன் டில்லரி, டிக்கோயா- டன்பார், கொட்டகலை- யுலிபீல்ட், தலவாக்கலை- ஹொலிரூட், கந்தப்பளை- கொன்கோடியா) பதுளை மாவட்டம் (எல்ல -நிவ்பேர்க், ஹப்புத்தளை- விஹாரகல) கண்டி மாவட்டம் (புசல்லாவை - சோகம) மாத்தளை மாவட்டம் (கந்தேநுவர - பிட்டகந்த) இரத்தினபுரி மாவட்டம் (நிவித்திகல- தொலஸ்வல) கேகாலை மாவட்டம் (அட்டாலே – நிவ் அராந்திரா) என மலையக மாவட்டங்கள் தோறும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. 

புதிய வீடமைப்புத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் 

ஏழு பேர்ச் காணியில் அமையப் பெறுகின்றது. 

பெருந்தோட்ட மக்களுக்கு காணியுரித்து வழங்கும் பசுமை பூமி திட்டத்தின் கீழ் காணியுரித்துகள் வழங்கப்படுகின்றன. 

வீட்டின் பரப்பளவு 550 சதுர அடி. 

இரண்டு படுக்கை அறை, ஒரு சமையலறை, ஒரு வரவேற்பறை ஒரு குளியலறை என உள்வடிவமைப்பு கொண்டது. 

ஒரு வீட்டின் பெறுமதி 12 லட்சம் ரூபா. 

இவ்வாறு தரநிர்ணயம் செய்யப்பட்ட வீடுகளே இனி மலையக மக்களுக்காக அமைக்கப்படவேண்டும் எனும் முன்மாதிரித் திட்டமாக இந்த 375 வீடுகளும் அமைக்கப்பட்டு வருகின்றது. 

மண்சரிவு மற்றும் தீ அபாயங்களில் சிக்கிக்கொண்ட மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள நிæலையில் ஏனைய மக்களுக்கு கடன் மற்றும் நன்கொடை கலந்த திட்டங்களாக எதிர்காலத்தில் நடைபெறவுள்ளது. இந்த வீட்டத் திட்டங்களுக்கு மேலதிகமாக இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 4000 வீடுகளை அமைப்பதற்காக பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. 

மேலதிகமாக இந்திய அரசாங்கத்திடம் 20000 ஆயிரம் வீடுகளுக்கான உதவிகளைக் கோருவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்து அதற்கான விண்ணப்பம் இந்திய அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பழனி திகாம்பரம் இந்த அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்து ஜனாதிபதி ஊடாக இந்திய பிரதமரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

கட்டப்படுகின்ற வீடுகளுக்கான காணியுறுதிப்பத்திரங்கள் அனைத்தும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் அமைச்சரவை அனுமதி பெறப்பட்டு அரசாங்கத்தினால் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் பெருந்தோட்ட மக்களுக்கு வீடமைப்பு காணி வழங்கும் ´பசுமை பூமி´ காணியுறுதித் திட்டத்தின் கீழ் காணியுறுதி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



மலையக மாநகரங்களில் அழிக்கப்பட்டுவரும் தமிழ் மக்கள்! - மகா


எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாநகர சபை, நகரசபை, பிரதேச சபை என்ற மூன்று பிரிவுகளில் மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.
இந்த சபைகள் வரும் 15.5.2015 கலைக்கப்பட்டு புதிய பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவிருக்கின்றார்கள்.

இந்த நிலையில் மலையகப் பகுதிகளில் குறிப்பாக நூரளை, தலவாக்கலை, ஹற்றன் போன்ற பகுதிகளில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக செறிந்து வாழ்கின்ற படியால் இவர்களின் பிரதிநிதித்துவம் மாநகர சபை, நகர சபை போன்றவைகளில் தலைமைத்துவத்தை தீர்மானிக்கும் சக்தி அதிகமாக உள்ளது.

இதனால் இந்த சபைகளை நடாத்துவதற்கு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் மிகமிக அவசியமாகின்றது.

குறிப்பாக மலையக மக்கள் 65 வீதம் வாழும் நுவரெலியா மாவட்டத்தில் மாநகர சபையில் இன்று ஆறு உறுப்பினர்கள் சிறுபான்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளாவர்.

மிகுதி நான்கு உறுப்பினர்களே பெரும்பான்மை இனத்தவர்கள். எனினும் மாநகர சபை முதல்வர் பெரும்பான்மை இனத்தவராக இருக்கின்ற போதும், இவர் சகல அபிவிருத்தி வேலைத் திட்டங்களையும் சிறுபான்மை இன பிரதிநிதிகளின் உதவியின் மூலமே அமுலாக்க வேண்டிய நிலையில் இருக்கின்றார்.

இந்த நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெறும்போது தமிழ் பிரதிநிதிகள் அல்லது சிறுபான்மை பிரதிநிதிகளை முற்றாக இல்லாது ஒழிக்கும் திட்டத்தை நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மை இன அரசியல் பிரதிநிதி மிக கச்சிதமாக, தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த பிரதிநிதியும் தெரிவு செய்ய முடியாதவாறு எல்லை மீள் திருத்தத்தை அமுலாக்க சகல ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ளார்.

இது சம்பந்தமான கலந்துரையாடல்களையும் சகல சிறுபான்மை இன அரசியல் பிரதிநிதிகளிடம் தற்பொழுது நடாத்தப்பட்டு அதில் மிக கவனமாக அவர்களின் அனுமதியை பெறும் அதிர்ச்சி திட்டம் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்காலத்தில் நாம் குறிப்பிட்ட மாநகர சபை, நகர சபைகளில் சிறுபான்மை மக்கள் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் குறிப்பாக தோட்ட மக்கள் அனைவரையும் பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேச எல்லைக்குள் மாற்றப்பட்டு பெரும்பான்மை மக்கள் கொண்ட சபையாக மாநகர சபை நகர சபைகள் மாற்றப்பட்டுள்ளது என்பதை நாம் குறிப்பிட்டே ஆகவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

நுவரெலியா மாநகர சபையை தனி பெரும்பான்மை சிங்கள பிரதிநிதிகள் சபையாக மாற்றியுள்ள நிலை வரும் தேர்தலில் உருவாகியுள்ளது.

தமிழ் தோட்ட தொழிலாளர்கள் அதிகமாக வாழும் பகுதிகளை நீக்கி அதற்கு பதிலாக சிங்கள மக்கள் வாழ்ந்த பிரதேச சபை பகுதியை சபையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரையும் பிரதேச சபைக்குள்ளேயே அடக்கும் திட்டமும் அம்பலத்திற்கு வந்துள்ளது.

எனினும் பிரதேச பகுதியில் வாழும் சிங்கள மக்களை ஒதுக்காது அவர்கள் வாழும் அந்த பிரதேச சபைக்குள் அவர்களின் பிரதிநிதித்துவத்தையும் தெரிவு செய்ய கூடிய வழிவகையையும் இவர் ஏற்படுத்தியுள்ளார் என்பதும் தெரியவருகின்றது.

இந்த இரகசிய திட்டத்தை வரும் உள்ளூர் ஆட்சி சபை தேர்தலில் நடைமுறைபடுத்த சகல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும் கடைசி நேரத்தில் இந்த விடயத்தை அறிந்த இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னண், முன்னாள் பிரதிநிதி அமைச்சர் புத்திரசிகாமணி அவர்கள் இன்று நூரளை மாவட்ட செயலாளரிடம் நேரடியாக சென்று விபரங்களை பெற்றதோடு, நூரளை மாவட்ட செயலாளரிடம் சகல விபரங்கள் அடக்கிய ஆவணங்களை பெற்றுக் கொண்டார்கள்.

மேலதிக நடவடிக்கை எடுத்து இந்த அரசியல் இனவாதியின் திட்டத்தை தகர்க்க இந்த விடயம் தொடர்பாக உடன் பேச்சுவார்த்தையை வரும் 9ஆம்திகதி நடாத்தும் படி மாவட்ட செயலாளரிடம் கோரியுள்ளனர்.

இந்த திட்டம் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் காலத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதும் தற்பொழுது தெரிய வந்துள்ளது.

தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்கும் திட்டம் நீண்ட காலமாக செயல்பட்டு வந்துள்ளது என்பதேற்கு இது ஒரு உதாரணம்.

எனவே மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகமாக உள்ள இந்த நுவரெலியா மாவட்ட உறுப்பினர்கள் எவ்வாறு இந்த திட்டத்தை தகர்க்க போகின்றார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.

தன் கையை வைத்தே தனது கண்களை குத்திக்கொள்ளும் திட்டத்தை 2014 ஆம் ஆண்டு திறமையாக செயல்படுத்தியுள்ள முன்னைய அரசும் அதற்கு துணைப் போன சிறுபான்மை தலைமைகளும் சிந்தித்து இதற்கு நல்ல முடிவை செய்யவேண்டும்.

இந்த திட்டம் நுவரெலியா மாநகர சபைக்கும் மடடும் இல்லாது தலவாக்கலை மற்றும் ஹற்றன் நகர சபைக்கும் சாத்தியமாகலாம் என்பது நிச்சயம்.

ஆகவே சிறுபான்மை தமிழ் அரசியல் தலைவர்கள் உடனடியாக இந்த விடயத்தில் கவனம் செலுத்தி தமிழ் மக்கள் கடந்த காலங்களில் எவ்வாறு வாக்களித்தார்களோ அந்த பகுதியில் அவர்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்யக்கூடிய நிலையை ஏற்படுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையேல் வரும் காலத்தில் மாநகர மற்றும் நகர சபைகளில் தமிழ் பிரதிநித்துவம் அழிக்கப்பட்டுவிடும் இதை அரசியல் தலைமைகள் தடுத்து நிறுத்தாவிட்டால் இது கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒப்பாகலாம்.

நன்றி - தமிழ்வின்

மலையகத்தின் உதவி ஆசிரியர் நியமன சர்ச்சை பற்றி...


மலையகத்தில் நீண்ட நாட்களாக பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்ற ஒரு விடயமாக உதவி ஆசிரியர் நியமனம் காணப்படுகின்றது.

இந் நியமனம் தொடர்பாக பல்வேறு கருத்துகளும், எதிர்ப்புகளும் வெளிக்கிளம்பி வருகின்றன. இது தொடர்பாக ஏற்கனவே நாங்கள் பல பிரச்சினைகளை சுட்டிக்காட்டியிருந்தோம். இந்நியமனம் நேர்மையற்ற முறையிலும் பக்கச்சார்பாகவும் கட்சி ரீதியாகவும் வழங்கப்படவுள்ளதாக பல தரப்புகளில் இருந்து கருத்துகள் பரிமாற்றப்பட்டிருந்தன. இதற்கு வலு சேர்க்கும் முகமாக தற்போது மீண்டுமொரு பிரச்சினை வெளிக்கிளம்பியுள்ளது. இவ்வுதவி ஆசிரியர் நியமனம் கடந்த மாதம் வழங்கப்பட இருந்த போதிலும் அது பல காரணங்களினால் பிற்போடப்பட்டு நாளைய மறு தினம் 08.05.2015 அன்று அலரிமாளிகையில் தெரிவு செய்யப்பட்ட 3028 உதவியாசிரியர்களுக்கான நியமனம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆயினும் தற்போது இந்நியமனம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவதால் நியமனத்தை வழங்குவதா? இல்லையா ? என்பது தொடர்பாக இழுபறி நிலை தோன்றியுள்ளது. அத்தோடு இந்நியயமனம் பக்கச்சார்பாகவும், அரசியல் நியமனம் என்ற ரீதியிலும் புத்தி ஜீவிகளால் நோக்கப்படுகின்றது.

இந்நியமனம் தொடர்பாக எழுந்த பிரச்சினைகள் வருமாறு
01.இந்நியமனத்திற்கான போட்டிப்பரீட்சை நடாத்தப்ட்ட போது பரீட்சை கண்காணிப்பாளர்களாக பல பரீட்சை நிலையங்களில் இ.தொ.க உறுப்பினர்கள் கடமைகளில் அமர்த்தப்பட்டிருந்தமை

02. பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளுக்கு இதுவரையில் பரீட்சை பெறுபேறுகள் அனுப்பி வைக்கப்படாமை

3. பரீட்சை பெறுபேறுகள் வெளிப்படுத்தப்படாமல் நேர்முக பரீட்சைக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டமை

04. ஒரு நபருக்கு பல இடங்களில் நடக்கும் நேர்முக பரீட்சைக்கு தோற்றுமாறு அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டமை

05. நேர்முகப்பரீட்சையின் போது உளச்சார்பு மற்றும் திறமைகளை கண்டு கொள்வதற்கான பரீட்சையாக அமையாது வெறுமனே ஆவணங்கள் சரிபார்க்கும் பரீட்சையாக அமைந்தமை

06. நேர்முகப்பரீ;ட்சைக்கு தோற்றாதவர்களுக்கும் நியமன கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை

07. அத்தோடு க.பொ.த உயர்தரத்தில் அவர்கள் கற்ற பாடத்திற்கும் தற்போது நியமனித்தின் போது வழங்கப்படுவுள்ள கற்பித்தலுக்கான பாடத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லாமை.

உ-ம் கா.பொ.த உயர்தரத்தில் வர்த்தக துறையில் கல்வி கற்றவர்களுக்கு தமிழ் மற்றும் வரலாறு பாடங்களிற்கான நியமன கடிதங்கள் அனுப்பி வைக்கப்ட்டுள்ளன.

08.இந்நியமனமானது பெருந்தோட்டப்பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமைவழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்த போதிலும், இவை பெருப்பாலும் நகர்ப்புற மற்றும் மத்தியத்தர வர்க்கதினருக்கே வழங்கப்படவுள்ளது.

09.இந்நியமனத்தில் 600 முஸ்லிம் மாணவர்களுக்கு இந்நியமனத்தில் உள்வாங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் பெருந்தோட்ட மாணவர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

10.அரசியல் நியமனமாக காணப்படுகின்றமை.

11.உதவியாசிரியர்களுக்கான கடமைகள் குறித்து தெளிவின்மை

இவ்வாறு இன்னும் பல்வேறு குறைபாடுகளை கொண்டும் காணப்படும் இந்நியமனம் உடனடியாக தடுத்த நிறுத்தப்பட வேண்டியதும், மீள்பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியதும் ஆகும்.

அத்தோடு கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளரின் ஊடாக நேர்முக பரீட்சைக்கு தோற்றாதவர்களுக்கும் நியமனக்கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது குறித்தும் உடனடியாக பரிசீலனை செய்யுமாறு ஆசிரியர் சமூகம், புத்தி ஜீவிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

நன்றி - சுயாதீன ஊடகம் பசுமை தாயகம்

மீரியபெத்தை மண்சரிவும் நடைமுறை வாழ்வியலும் - பதுளை ஏ.தியாகு


கொஸ்லாந்தை, மீரியபெத்தை யில் பாரிய மண்சரிவு இடம்பெற்று 06 மாதங்களாகின்றன. ஆயினும் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை நிலையிலும் நடைமுறை வாழ்வியல் முறையிலும் எந்தவிதமான முன்னேற்றங்களோ அபிவிருத்திகளோ இதுவரை ஏற்பட்டதாகத் தெரியவில்லை. பலரின் உயிர்களை காவு கொண்டும் மக்களின் பொருளாதாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தியும் பல்வேறு தொடர்ச்சியான இன்னல்களையும் சொல்லொணா துன்பங்களையும் பூனாகலை மாக்கந்தை தொழிற்சாலை முகாமிலுள்ள மக்கள் அணுதினமும் அனுபவித்து வருகின்றனர்.

இது சம்பந்தமாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய சுப்பிரமணியம் கலைமகள், நான் கடந்த 5 மாதங்களாக பூனாகலை மாக்கந்தை பழைய தொழிற்சாலையில் வசித்து வருகின்றேன். மீரியபெத்தை மண்சரிவால் முற்று முழுதாக பாதிக்கப்பட்ட 63 குடும்பங்களுடன் 10 பாதிக்கப்பட்ட குடும்பங்களுமாக மொத்தமாக 73 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றோம்.

அப்பா மொறட்டுவை சுப்பிரமணியம் 58, அம்மா, பெரியண்ணன் ரஞ்சிதம் 53, தங்கை சுப்பிரமணியம் பவானி 31, மூவருமே மண்சரிவில் உயிரிழந்து விட்டனர். எஞ்சியது நானும் எனது மகளான தர்ஷிகா வயது 7. மண்சரிவு நேரத்தில் நான் டோஹா கட்டார் நாட்டுக்கு தொழிலுக்கு சென்றிருந்தேன். அங்கு சென்று 20 நாட்களே தொழில் புரிந்தேன். அந்நேரத்திலேயே இந்தப் பாரிய அனர்த்தம் ஏற்பட்டது.

மேலும் இதற்குப் புறம்பாக பாதிப்புறு நிலையிருக்கும் பல குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றன. ஆயினும் எந்தவிதமான உலர் உணவுப் பொருட்களும் தற்போது கிடைப்பதில்லை. பெப்ரவரி மாதம் இறுதிப் பகுதி வரை ஹல்தும்முல்லை உதவி அரசாங்க அதிபர் ஊடாக சமைத்த உணவு கிடைக்கப் பெற்றது. முகாமிலுள்ளவர்களைக் கொண்டே சமையல் வேலைகள் யாவும் இடம்பெற்றன. பெப்ரவரி மாதம் வரை அரசினாலும் அரச சார்பற்ற அமைப்புக்களினாலும் பல்வேறு உதவிகள் கிடைக்கப்பெற்றன. அது போல் ஏனைய பிரதேசத்திலுள்ள மக்கள் பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளார்கள்.

ஆயினும் தற்போது சகல நிவாரணங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. கிழமைக்கு ஒரு நாள் நூடில்ஸ், பிஸ்கட் என்பன தற்போது வழங்கப்படுகின்றன.

மேலும் ரூபா 700 தொடக்கம் ரூபாய் 500 வரைக்கும் உட்பட்ட குடும்பங்களிலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவு முத்திரை வழங்கப்படுகின்றது. இம்முத்திரையினால் பூனாகலை கூட்டுறவுச் சங்கம் கடையில் மாத்திரமே பொருட்களை வாங்க முடியும். அத்தோடு குடும்பங்களுக்கு மேலதிகமாக பல்வேறு செலவுகள் இருப்பதால் வழங்கப்படும் உணவு முத்திரையின் பெறுமானம் போதியதாக காணப்படவில்லை.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் இருவருடங்களுக்கு கொடுக்கக்கூடிய பல்வேறு விதமான பொருட்கள் உதவியாக கிடைக்கப் பெற்றன. ஆயினும் அப்பொருட்களுக்கு என்ன நடந்ததென்பது கேள்விக்குறியாகவுள்ளது. உலர் உணவுப் பொருட்களுக்கு புறம்பாக வீட்டுக்குத் தேவையான மனையியற் பொருட்கள் பொதுமக்களினால் முகாமுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்டன. ஆயினும் முகாமில் வதியும் மக்களுக்கு இவ்வாறான பொருட்கள் கிடைத்ததாகத் தெரியவில்லை.

ஆனால், பண்டாரவளை கிறிஸ்தவ ஆலயத்தின் அருட்சகோதரி மூலம் வழங்கப்பட்ட சமைக்கக்கூடிய உபகரணங்கள் மூலம் இன்று வரை மக்கள் தமதுணவை சமைத்து வருகின்றனர் என்பது இங்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன்.

ஆயினும் தற்போது காடுகள் அழிக்கப்பட்டு 4 வீடுகளுக்கு அத்திவாரமிடப்பட்டு சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. ஏனைய சகல வீடுகளும் இவ்வாறே நிர்மாணிக்கப்படும் என மக்கள் நம்பி வருகின்றனர். மக்களின் நம்பிக்கை வீணடிக்கப்படலாகாது. மிகக் கூடிய காலகெதியில் இவ்வீடுகள் அமைக்கப்படுவது அவசியமானதாகும்.

மேலும் முகாமில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு மலசல கூட சுத்திகரிப்புகள் கிழமைக்கு ஒரு தடவை ஏற்படுத்தப்பட வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதேவேளை, களஞ்சிய அறையில் வைக்கப்பட்டு காலாவதியான உணவுப் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டுமென மக் கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் மக்கள் பொருளாதார கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருவதால் காலாவதியாவதற்கு முன்பே பைக்கற்றுகளில் அடைக்கப்பட்ட பொருட்களை குறிப்பிட்ட திகதிகளுக்கு முன்பதாக மக்களுக்கு வழங்கி வைத்தால் அது மிகவும் பிரயோசனமானதாக அமையும் என்பது அனைவரது எண்ணமாகும்.

அத்தோடு கடும்மழை காலங்களில் முகாமினுள் தண்ணீர் பாய்வதால் இங்கு வாழும் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். எனவே இதற்கு முறையான முன்னேற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இதேவேளை, இந்த முகாமில் பல பிள்ளைகள் பக்கத்திலிருக்கும் பாடசாலைகளுக்கு கல்வி கற்பதற்காக செல்வதாலும் மாலை நேரங்களில் அவர்கள் முகாமுக்கு வந்து உரிய முறையில் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான சூழலை இங்கு வாழும் மக்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவ்வாறு சூழல் அமையாதவிடத்து கல்வி கற்கும் பிள்ளைகளை ஒரு சில பெற்றோர்கள் வேறு இடங்களுக்கு மாற்றி பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பதை தவிர்க்க முடியாததாகிவிடும்.

எனவே கொஸ்லாந்தை மீரியபெத்தை மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக அரசு உரிய நடவடிக்கைகளை உரிய காலத்தில் எடுக்க வேண்டுமென்பதே எனது மாத்திரமல்ல அனைவரதும் எதிர்ப்பார்ப்பாகும்.

நன்றி - வீரகேசரி

தொழிற்சங்கவாதிகள் சிந்தித்து செயற்பட வேண்டும்


உலகில் அன்றாடம் இயற்கை செயற்கை அனர்த்தங்கள் எத்தனையோ நடைபெறுகின்றன. இந்த அனர்த்தங்களில் உயிர்ச்சேதமும் சொத்துக்கள் அழிவும் ஏற்பட்டு க்கொண்டுதான் இருக்கின்றன. எமது இலங்கையில் 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரலையில் பாரியதொரு அழிவுகளை கடற்கரையோரங்களில் வாழ்ந்த மக்கள் அனுபவித்தனர். இரண்டாவது பெரிய அனர்த்தமாக ஒக்டோபர் 29ம் திகதி பதுளை கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவை எடுத்துக்கொள்ளலாம். 150 வருடங்களாக அடிப்படை வசதிகள் இல்லாது வாழ்ந்து கொண்டிருக்கும் எமது தோட்டப்புற மக்களே இந்த அனர்த்தத்தில் சிக்கி தங்கள் உறவுகளையும் சொத்துக்களையும் இழந்து துடித்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்த மண்சரிவில் எத்தனை உயிர்கள் காவப்பட்டன என்ற விபரம் சரியாகத் தெரியாமல் மீட்பு பணிகள் முடிந்து விட்டன. மண்சரிவில் காணாமல் போனவர்களில் 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்படாத சடலங்கள் அம்மக்கள் வாழ்ந்த அந்த மண்ணுக்கு உரமாக போடப்பட்டுவிட்டதாகத்தான் எண்ணத் தோன்றுகின்றது. கடந்த 30 வருடங்களாக யுத்தத்திலும், 1983ம் ஆண்டு ஆடிக் கலவரத்திலும் செயற்கையான முறையில் தோற்றம் பெற்ற அனர்த்தத்தில் எத்தனையோ உயிர்களும் சொத்துக்களும் அழிவடைந்தன. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறதென்று எம்மை படைத்த கடவுளிடம் முறையிடலாம் என்று நினைத்தால் அவரும் மண்ணில் புதையுண்டு எமக்கெல்லாம் வேடிக்கை காட்டுகின்றார். இந்த 21ஆம் நூற்றாண்டில் நவீன விஞ்ஞானம் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் தொழில்நுட்பங்கள் மூலம் இப்படியான அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னர் அவை குறித்து அறிந்து முன்னேற்பாடுகளை மேற்கொண்டு அனர்த்தத்தினால் ஏற்படக்கூடிய சேதங்களை தடுக்கலாம். தேசிய அகழ்வாராய்ச்சி நிறுவனத்தால் மண்சரிவு அபாயமுள்ள பிரதேசமாக 2005ஆம் ஆண்டிலும் 2011ஆம் ஆண்டிலும் இப்பிரதேசம் மக்கள் குடியிருப்புக்கு பொருத்தமற்றது என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த மக்களை வேறு இடங்களில் குடியேற்றுவதற்கு எந்தவொரு முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. தோட்டப்புற மக்களை பெரும்பான்மையான அங்கத்தவர்களைக் கொண்ட தொழிற்சங்கத் தலைவர் இந்த பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் இருப்பதாக தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லியிருப்பது வேடிக்கையாக இருக்கின்றது.

பி.பி.சி. தமிழ் ஓசைக்கு இவர் கொடுத்த பேட்டியை பார்க்கும் போது எந்தளவுக்கு இம்மக்களுக்கு இவர் சேவை செய்திருக்கின்றார் என்று புரிகின்றது.

தனித்தனி வீடுகளாக இருந்திருந்தால் இந்த அனர்த்தத்தல் இப்படியானதொரு பாரிய அழிவினை தவிர்த்திருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது. 1980ஆம் ஆண்டிலே மலையக மக்களுக்கு தனி வீடுகள் அமைப்பதற்கு ஏற்பாடுகள் தொடங்கின. 2014ஆம் ஆண்டுடன் 34 வருடங்கள் முடிவடையும் நிலையிலும், கட்டப்படவேண்டிய வீடுகளில் 1/4 வாசியை கூட எட்டமுடியாத நிலைமையே காணப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர்களுக்கு இரண்டரை இலட்சம் வீடுகள் தேவைப்படும் நிலையில் சுமார் 23 ஆயிரம் தனி வீடுகளே கட்டிக்கொடுக்கப்பட்டதாக அறிய முடிகின்றது. இன்னும் எத்தனை ஆண்டு காலம் இம்மக்கள் காத்திருக்க வேண்டியிருக்குமோ தெரியவில்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கு சேவை செய்கின்றோம். என்று கூறிக்கொண்டு காளான்கள் முளைத்தது போல மலையகம் எங்கும் ஒவ்வொரு பெயரிலும் தொழிற்சங்கங்கள் முளைத்திருக்கின்றன. இவர்கள் இந்த மக்களுக்கு சேவைசெய்வதை விட கிடைக்கும் சந்தா பணம் தான் இவர்களின் பிரதான குறிக்கோளாகும். இவர்களின் சுயநலத்திற்காக தோட்டபுற மக்களை பிரித்துவைத்து வேடிக்கை பார்க்கின்றார்கள். புத்தகங்கள் வழங்குவதும், கோயிலுக்கு மணி கொடுப்பதும், பாதைகள் அமைப்பதிலும் இம்மக்களை உயர்த்த முடியாது. தோட்டப்புற மக்களின் பிரதான அடிப்படை வசதிகளை முதலில் செய்து கொடுக்க வேண்டும். இதில் பிரதானமானது காணியுடன் சேர்ந்த வீடு. மலையக வாக்குகளை பெற்று இவர்களின் பிரதிநிதிகளாக செயற்படும் மலையக தொழிற்சங்கவாதிகளே இம்மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்ய வேண்டும்.

சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றவர்கள் எப்படி மலையக மக்களுக்காக பேசுவார்கள்.? செயற்படுவார்கள்? முக்கியமாக அரசாங்க பங்காளியாக இருக்கும் தொழிற்சங்கங்களும் அதன் தலைவர்களும் இந்த வீடு, காணி விடயத்தில் முக்கிய கவனம் செலுத்தி இதற்கு தீர்வினை பெற்றுகொடுக்க வேண்டும். அரசாங்கம் நினைத்தால் கம்பனிகளிடம் காணிகளை சுவீகரித்து தனித்தனியாக வீடுகளை கட்டிக்கொடுக்கலாம். அந்நிய செலாவணியை அள்ளிக்கொடுக்கும் எமது இந்த மலையகமக்களை அரசாங்கமும் கவனிப்பதில்லை என்பதும் மனவேதனைக்குரிய விடயமாகும். காலம் காலமாக இம்மக்கள் எல்லாவகையிலும் ஏமாற்றப்படுகின்றார்கள். தோட்டப்புற மக்களின் வாக்குகளை பெற்று சுகபோகங்களை அனுபவிக்கும் தொழிற்சங்கத் தலைவர்கள் இம்மக்களின் நலன்கள் மேன்மையடைந்தால் (வீடு, காணி) தம் இருப்புக்கு ஆபத்து வந்து விடும் என்று நினைப்பதும் ஒரு காரணமாகும். லயன் அறைகளில் பிறந்து வளர்ந்த தலைவன் ஒருவனுக்குத்தான் இம்மக்களுக்கு உண்மையான சேவைசெய்ய முடியும். மலையக இன்றைய தலைமைகள் நன்கு சிந்தித்து அம்மக்களுக்காகவே தங்களை அர்ப்பணித்து செயற்பட வேண்டும். பதுளை கொஸ்வத்தை மீரிய பெத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவுக்குப் பிறகு தோட்டப்புற எமது மக்களுக்கிடையே பாரிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. மலையக மக்களுக்கு பொருத்தமான காணிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு உடனடியாக அவசரகால அடிப்படையில் பாதுகாப்பான இடங்களில் வீடுகளை அமைத்துக் கொடுக்காவிடின் கொஸ்லந்தை போன்ற பல அனர்த்தங்களை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும். அதே நேரத்தில் எமது இந்த மலையக மக்களும் தொழிற்சங்க கட்சிகளில் நம்பிக்கை இழந்து தேசியக் கட்சிகளில் இணையக்கூடும். எல்லா மலையக தொழிற்சங்கங்களும் ஒற்றுமையுடன் செயற்பட்டால் எதனையும் எதிர்காலத்தில் சாதிக்கலாம். அப்படி செயற்படாவிட்டால் தோட்டப்புற மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் உங்களுக்கு நல்ல பாடங்களை கற்பிப்பார்கள். இது நிச்சயம் நடக்கும்.

எம்.பாலகிருஷ்ணன், களுபோவில.
நன்றி - வீரகேசரி

தேசியக்கொடியும் புதிய இனவாத அமைப்பின் எழுச்சியும் - என்.சரவணன்


இலங்கையின் தேசியக் கொடி பற்றிய சர்ச்சை சமகால அரசியல் அரங்கில் மேலோங்கிவிட்டிருப்பதை இந்த நாட்களில் கவனித்திருப்பீர்கள். இந்த போக்கின் பின்னால் உள்ளார்ந்திருக்கும் அரசியல் நலன்கள், பேரினவாதிகளின் பாசிச நலன்கள், அவர்களின் நீண்டகால குறுங்கால தந்திரோபாயங்கள், அவர்களின் திசைவழி என்பன குறித்து அலட்சியப்படுத்திவிட முடியாது.

தேசியக் கொடி என்பது தமிழர்களைப் பொறுத்தளவில் அவ்வளவு அக்கறைக்குரிய ஒன்றாக இல்லாமல் போய் நெடுங்காலம் ஆகிவிட்டாலும் கூட அரசியல் தளத்தில் தேசியக்கொடியை சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிரான ஒரு வடிவமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை அலட்சியப்படுத்திவிட முடியாது. மேலும் சிங்கள பௌத்த பேரினவாதம் என்பது நிருவனமயப்பட்டது என்று நாம் கூறும் போது அது எப்படி என்று நிறுவுவதற்கு இந்த சம்பவங்களின் போக்குகளே மூலாதாரங்களாக அமைகின்றன. அது தவிர அசியலமைப்பின் மூலம் உறுதிசெய்யப்பட்ட ஒன்றை சவாலுக்குள்ளாக்கும் பேரினவாத அராஜகங்கங்களை நிறுவனமயப்பட்ட பேரினவாத கட்டமைப்பானது திரைமறைவில் அனுசரணை வழங்கவே செய்யும். அத்தகைய போக்கிற்கான சிவில் ஆதரவும் போதுமான அளவு கிடைக்கவே செய்யும். அதைத்தான் “நிருவனமயப்பட்டது” என்கிறோம்.

இலங்கையின் அரசியலமைப்பு, அரசியல் அதிகாரம், கல்வி கட்டமைப்பு, நீதி-நிர்வாகத்துறை, சிவில் நிறுவனங்கள், பௌத்த நிறுவனங்கள், ஊடகத்துறை என அனைத்துத் துறைகளும் சிங்கள பௌத்த பேரினவாதமயப்படுத்தப்பட்டது தான் என்பதை வரலாறு மீள மீள உறுதியாக தெளிவுபடுத்திவந்திருக்கிறது. எனவே தான் அதனை மாற்றியமைப்பதும் அத்தனை இலகுவான காரியமல்ல என்பதை நீதி கோரும் சக்திகள் அனைத்தும் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த அடிப்படை கட்டமைப்பை மாற்றுவதற்கான தொடர் போராட்டம் என்பது சகல வழிகளிலும், சகல வடிவங்களிலும், சகல உத்திகளாலுமே சாத்திப்படுத்தலாம். எனவே தான் தேசிய கொடி விடயத்தையும் ஒரு “விவகாரமாக” அணுகுவது அவசியமாக ஆகியிருக்கிறது.

முன்னெடுத்துள்ள சக்திகள்?
கடந்த மூன்றாண்டுகளுக்குள் பேரினவாதத்தை பட்டை தீட்டியதில் பொது பல சேனாவின் பங்கு பாரியது. சற்று ஓய்ந்திருந்த பேரினவாத சக்திகளை உசுப்பேத்தி வெளிக்கிளரச் செய்ததில் அதன் பங்கு முக்கியமானது. உண்மையை சொல்லப்போனால் இத்தகைய பேரினவாத கிளர்ச்சியை முன்னெடுப்பதற்கான ஓர்மமும், பலமும் ஜாதிக ஹெல உறுமயவிடம் தான் இருந்தது. ஆனால் அதன் பாராளுமன்ற பாதை அதன் வீரியத்தை சற்று ஜனநாயகப்படுத்தியிருந்தது. அந்த இடைவெளியையே பொது பல சேனா நிரப்பியது. அப்படிப்பட்ட பொது பல சேனா மிகக் குறுகிய காலத்தில் இராட்சத பலத்தை அடைந்ததற்கு மகிந்த அரசாங்கத்தின் அனுசரணை முக்கிய காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

பொது பல சேனாவின் அடக்கமுடியாத அடாவடித்தனங்களை அதனை ஆக்கியவர்களால் கூட அடக்க முடியாத நிலை தோன்றியது. சென்ற வருடம் இதே மாதத்தில் அழுத்கமையில் மேற்கொண்ட கலவரம் பொது பல சேனாவின் பலத்துக்கு ஒரு சான்று என்பது மட்டுமல்ல அதன் பலவீனத்துக்கும் சான்றாக அமைந்தது. பொது பல சேனாவுக்கும் தமக்கும் ஓட்டும் இல்லை, உறவும் இல்லையென்று பலர் தப்பியோடினார்கள். ஆனால் பொது பல சேனா தம்மை சிங்கள பௌத்த தரப்புக்கு தலைமையாக்கும் பிரயத்தனங்கள் எதுவும் பலிக்கவில்லை. பல செயற்திட்டங்களை பாரிய அளவில் மேற்கொண்ட போதும் அவை எதுவும் வெற்றிபெறாத நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த தரப்புக்கு ஆதரவை தெரிவிக்க கூட முடியாத நிலை தோன்றியது. எவருக்குமே பொது பல சேனாவின் ஆதரவு தேவையில்லை ஆளை விட்டால் போதும் என்கிற நிலை உருவானது. மகிந்த தரப்பின் தோல்விக்கு பொது பல சேனாவின் பாத்திரமும் முக்கியமானது என்பதை மகிந்த தரப்பே பகிரங்கமாக ஒப்புகொள்ள வேண்டிய நிலை இன்று.

இப்படி கையறு நிலைக்கு தள்ளப்பட்ட பொது பல சேனா 50க்கும் மேற்பட்ட வழக்குகளை தற்போது எதிர்கொண்டபடி இருக்கிறது. வழக்குகளை எதிர்கொள்வதிலும் அதற்கான நியாயங்களை ஊடகங்களுக்கு எடுத்துரைப்பதிலும் அதன் சக்தியை செலவிட வேண்டிய நிலை இப்போது. பொதுபல சேனாவின் வீரியம் இப்படி குறைக்கப்பட்ட நிலையில் தோன்றியது தான் “சிங்களே ஜாதிக பெரமுன” என்கிற அமைப்பு. “சிங்கள ராவய”, “ராவணா பலய” போன்ற அமைப்புகளும் மகிந்த ஆதரவு அணியில் இருந்துகொண்டு இனவாத நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதும் பொது பல சேனாவின் முன்னால் தாக்கு பிடிக்க முடியாமல் போனது. சமீபத்தில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பகிரங்கமாக கூறிய ஒரு தகவலும் முக்கியமானது. தன்னை பல கோடிகளுக்கும், பதவிகளுக்கும் விலைபேசுவதற்காக “ராவணா பலய” அமைப்பையே மகிந்த தரப்பு அனுப்பியிருந்ததாக கூறியிருந்தார். ஆக நேரடியாகவே மகிந்த சார் பேரினவாத போடுதடிகளாக செயற்பட்ட சக்திகள் இவை.

இன்றைய பேரினவாத தலைமை?
ஆனால் இன்றைய இனவாத போக்குக்கு தலைமை தாங்கத் தொடங்கியிருப்பது யார். அது சிங்களே ஜாதிக பெரமுன (சிங்கள தேசிய முன்னணி).

இந்த அமைப்பு கடந்த பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி தம்மை ஒரு சிங்கள பௌத்த அரசியல் அமைப்பாக ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி பிரகடனப்படுத்திக்கொண்டது. இது ஒரு வெறும் சிவில் அமைப்பல்ல. தம்மை அரசியல் கட்சியாக பிரகடனம் செய்திருக்கிறது. அமைப்பின் இலக்கு குறித்து மூன்று பக்கங்களில் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூட “தனிச்சிங்க” தேசியக் கொடியை முகப்பின் தலைப்பில் இட்டிருந்தனர்.

சிங்கள ஜாதிக பெரமுன என்கிற இன்னொரு அமைப்பு இதற்கு முன்னர் இயங்கி வந்தது. தமிழ் அரசியல் கட்சிகள் இனிமேல் “தமிழ்”, தமிழ் தேசியம்”, “ஈழம்” போன்ற பெயர்களை வைக்கக்கூடாது என்று 2012இல் வழக்கு தொடர்ந்திருந்தது இது. அதுபோல 2013இல் வடக்கில் சிங்களவர்கள் மீள குடியேற்றப்படும்வரை மாகாணசபை நடத்தக்கூடாது என்று போராடிய அமைப்பு. ஆனால் அந்த அமைப்பு அல்ல இந்த புதிய அமைப்பு. இரண்டுக்கும் வித்தியாசம் பழையது “சிங்கள”, புதியது “சிங்களே” என்று தொடங்குகிறது.

“நமது நாட்டில் 60 அரசியல் கட்சிகள் இருக்கின்றன. ஆனால் இவற்றில் ஒன்று கூட சிங்கள பௌத்த கட்சி இல்லை. தமிழர்களும் மரக்கலகாரர்களும் தேசிய அளவில் எந்த நலன்களுக்காகவும் இருக்க மாட்டார்கள் ஆனால் தமது தேசிய இன நலன்களுக்காக முண்டியடித்துவந்து விடுகிறார்கள். நாட்டின் பொருளாதாரம் குறித்தோ அல்லது மாணவர்களின் போராட்டங்களுக்கு கூட அவர்கள் பங்குபற்றுவதில்லை. இப்போது எங்களுக்கு என்று சிங்கள பௌத்த கட்சியை உருவாக்கியிருக்கிறோம்” என்று அதன் பொருளாளர் திஸ்ஸ பியகுன அறிவித்திருந்தார். “இனி வரும் நாட்களில் எங்களால் பல அரசியல் கதிரைகள் சூடு பிடிக்கும்.” என்று அதன் அமைப்பாளர் ஜினானந்த தேரர் அங்கு அறிவித்திருந்தார்.
இந்த அமைப்பின் ஆரம்பமே தேசியக் கொடி சர்ச்சையிலிருந்து தான் ஆரம்பிக்கிறது. 200ஆண்டுகளுக்கு முன்னர் 1815 மார்ச் 2 அன்று ஏற்றப்பட்ட ஆங்கிலேயர்களின் கொடியை அன்றே இறக்கியவர் வாரியபொல ஸ்ரீ சுமங்கலதேரர். அதன் நினைவாக கடந்த மார்ச் 2ஆம் திகதி அதே இடத்தில் சிங்களக் கொடியை ஏற்றியே தீருவோம் என்று சிங்களே ஜாதிக பெரமுன (சிங்கள தேசிய முன்னணி) பெரிய ஊர்வலமாக கொழும்பிலிருந்து கண்டிக்கு சென்றது. பொலிசாரின் எதிர்ப்பையும் மீறி பிக்குகளின் தலைமையில் அடாவடித்தனமாக ஆவேசத்துடன் நுழைந்து அங்கிருந்த தேசியக்கொடியை இறக்கி விட்டு தமிழ்-முஸ்லிம் இனங்களை பிரநிதித்த்துவப்படுத்தும் பச்சை செம்மஞ்சள் நிறங்கள் அகற்றப்பட்ட சிங்கம் மட்டும் இருக்கின்ற “சிங்கக்கொடியை” ஏற்றினார்கள். தம்மை தீவிர சிங்கள பௌத்த வீரர்களாக சித்திரித்து சர்சைக்குள்ளாக்கிக்கொள்வதன் மூலம் அனைவரதும் கவனிப்பைப் பெறும் கைங்கரியத்தையே அவர்களும் கையாண்டார்கள். அங்கு அவர்களுக்கு கிடைத்த புகழும், கவன ஈர்ப்பும் அவர்களின் அடுத்த நடடிக்கைகளுக்கு மனத்திடத்தை கொடுத்திருந்தது. தொடர்ந்தும் அந்த கொடியையே தேசிய கொடியாக ஆக்கவேண்டும் என்று தொடர் போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.







இவர்களே தேசிய கீதம் தமிழில் பாடப்படுவதை எதிர்த்தும் ஆர்ப்பாட்டங்களையும், பிரசாரங்களையும் சமீபத்தில் முன்னெடுத்தவர்கள். மார்ச் 23 அன்று கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னாள் இவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியதுடன் சிங்களத்தில் துண்டு பிரசுரங்களையும் விநியோகித்தார்கள். அங்கும் பகிரங்கமாக தனிச் சிங்கள சிங்கக் கொடியை பலரும் ஏந்தியபடி இருந்தார்கள்.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் மருதானை சமூக சமய நிலையத்தில் (CSR) மனித உரிமையாளர்களால் நடத்தப்படவிருந்த காணாமல் போனோரின் பெற்றோர்களின் கூட்டத்தை நடத்தவிடாமல் கைகலப்பில் ஈடுபட்டு அதனை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்தியதும் இந்த அமைப்பே.

குருகல முஸ்லிம் பள்ளிவாசலை அகற்றும் போராட்டத்தில் தீவிரமாக இருந்த சிங்கள ராவய அமைப்புடன் சேர்ந்து இயங்கியது இந்த சிங்களே ஜாதிக பெரமுன. இறுதியில் அந்த பள்ளிவாசலை அகற்றிவிட அரசாங்கம் தீர்மானம் எடுத்தது. ஆக இந்த வெற்றியில் இந்த அமைப்புக்கு முக்கிய பாத்திரமுண்டு.

மகிந்த மட்டுமே சிங்கள பௌத்த நிகழ்ச்சிநிரலுக்கு வாய்ப்பானவர் என்கிற நம்பிக்கை இவர்களுக்கும் உண்டு. கடந்த மாதம் 23ஆம் திகதி கோத்தபாயவை லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரிப்பதற்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது இவர்கள் “தனிச் சிங்கள தேசியக் கொடியை ஏந்தி வந்திருந்தார்கள். அன்றைய தினம் பொது பல சேனா இந்த கொடி விடயத்தில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. ஆனால் சிங்களே ஜாதிக பெரமுன, “ஸ்வர்ண ஹங்ச பதனம” (இந்த அமைப்பு மாகாணசபை முறைக்கு எதிராக போராடிவரும் ஒரு அமைப்பு) மற்றும் “ராவணா பலய” ஆகிய அமைப்புகளே நூற்றுக்கணக்கான தனிச் சிங்கள கொடிகளை விநியோகித்திருக்கிறார்கள். சிங்கள பௌத்தத்தை உறுதி செய்வதற்காக கோத்தபாய உருவாக்கிய அணிகளே இவை.

தேசியக் கொடியின் பயன்பாடு குறித்து சட்டமியற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களே சட்டத்தை மீறும் வகையில் (அதுவும் அரசியலமைப்பில் உறுதிபடுத்தப்பட்ட தேசியக்கொடியை திரித்து) திரிபுபடுத்தப்பட்ட தேசியக்கொடியை பயன்படுத்தியது பாரதூரமானது. டலஸ் அலஹப் பெருமா மாத்திரமே பகிரங்க மன்னிப்பை கோரினார். ஏனையோர் நியாயப்படுத்தினர். சிங்கள ஜாதிக பெரமுன அமைப்பாளர் ஜினானந்த தேரர் 28 நடத்திய ஊடக மாநாட்டின் போது கருத்து தெரிவிக்கையில் “இதுவே எங்கள் தேசியக் கொடி 1951இல் தேசிய கொடியை உருவாக்குவதற்கான குழுவிடம் சாட்சியமளித்த 160 பேரில் 97 பேர், அதாவது பெரும்பாலானோர் இந்த தனிச் சிங்கக் கொடியே தேசியக் கொடியாக அமைய வேண்டும் என்றார்கள். ஆனால் அதனை உதாசீனப்படுத்திவிட்டு சிறுபான்மை இனங்களின் பேச்சைக் கேட்டு கொடியை இப்படி ஆக்கிவிட்டார்கள்” என்றார்.

ஜினானந்த தேரர் திடீரென்று தொன்றியவரல்லர். அவர் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் (Patriotic National Movement) எனும் அமைப்பின் தலைவர். ஜெனிவா போர்க் குற்றச்சாட்டுக்கு எதிராக பெருமளவு போராட்டங்களை முன்னெடுத்து வரும் அமைப்பு அது. கடந்த வருடம் செப்டம்பர் 29 அன்று ஜெயக்குமாரியை விடுவிக்கக் கோரி சிவில் அமைப்புகள் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் நடத்திய ஆர்ப்பாட்டத்தை குழப்புவதற்காக அவர்களுக்கு அருகிலேயே அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ததும் இந்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தான். குருகல பள்ளிவாசலை அகற்றுவதற்காக 03.05.2011இல் உருவாக்கப்பட்ட “பொதுஜய இயக்கத்தின்” (Bodujaya Organisation) தலைவரும் இவர் தான். 2008ஆம் ஆண்டு ஜூலை 7 அன்று தலாஹேன பகுதியில் கல்வாரி தேவாலயத்தின் மீது தாக்குதல் தொடுத்த வழக்கின் 13 சந்தேக நபர்களில் ஜினானந்த தேரரும், ஞானசார தேரரும் அடங்குவர். அந்த சம்பவத்தின் போது அங்கிருந்த பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட குற்றச்சாட்டும் இவர்களின் மீது சுமத்தப்பட்டிருந்தது.


சிங்கள பௌத்த கொடி
தமிழர்களைப் பொறுத்தளவில் இது பற்றி 1951இல் நடந்த பாராளுமன்ற விவாதத்தில் பேசிய தந்தை செல்வநாயகம், இலங்கையின் தேசியக் கொடி, சிங்களவர்களின் சிங்கம், தமிழரின் நந்தி, முஸ்லீம்களின் பிறை
என்பவற்றைக்  கொண்டதாக அமைய வேண்டும் என்று பிரேரித்திருந்தார் அதனை வட்டுக்கோட்டை எம்.பீ திரு ஜே.கணகரத்தினம் ஆமோதித்திருந்தார். சுதந்திரக் கொண்டாட்டத்தின் போது நாட்டின் எப்பகுதியிலாவது நந்திக்கொடியை ஏற்றக்கூடாது எனவும் சிங்கக்கொடியை ஏற்றுவது பொருத்தமற்றது எனக் கருதினால் ஆங்கிலக் கொடியை ஏற்றலாம் எனவும் அன்றைய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழரசு கட்சி நடத்திய பல நிகழ்வுகளில் நந்திக் கொடியை ஏற்றியதாக பதிவுகள் கூறுகின்றன. யாழ்ப்பாணத்தை இறுதியாக ஆண்ட சங்கிலியன் மன்னனின் கொடியே நந்தி கொடி என்பது தெரிந்ததே.

தென்னிலங்கையில் சிங்கக் கொடி ஏற்றும் போது வடக்கு கிழக்கு மக்கள் தமது தன்னாட்சியை வெளிப்படுத்த நந்திக் கொடி ஏற்றுவர் எனத் தமிழ்த் தலைவர்கள் அறிவித்தனர். அதனால் வடக்கிலும் கிழக்கிலும் சிங்கக் கொடியோ நந்திக் கொடியோ பறக்கவிடக் கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டது. எனினும் தமிழர் பகுதிகளில் சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடிகளே பறக்கவிடப்பட்டிருந்தன.

கொடியில் இரண்டு சிறுபான்மை இனங்களும் சிங்கள தேசத்தின் எல்லைக்கு வெளியே இருப்பதாகவும், அந்த இனங்களைத் தடுத்து நிறுத்தவதற்காக, சிங்கம் தன் கையில் வாளுடன் கண்காணித்து நிற்பதாகவும் உருவகப்படுத்தப்படுகின்றது என தேசியக்கொடி உருவாக்கக் குழுவில் இருந்து அன்று வெளியேறிய செனட்டர் நடேசன் அதனை எதிர்த்திருந்தார். 1951இல் அது ஒரு சிங்களக் கொடியாக ஆனது போல 1972ஆம் ஆண்டில் அது சிங்கள பௌத்த கொடியாக ஆக்கப்பட்டது. 1972ஆண்டு அரசியலமைப்பில் முதன் முறையாக பௌத்த மதம் அரச மதமாக ஆனது மட்டுமல்ல தேசியக் கொடியில் சிங்கம் இருக்கும் கட்டத்தினுள் நான்கு மூலையிலும் பௌத்த மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அரச இலை வைக்கப்பட்டது. அன்றிலிருந்து தேசியக்கொடி சிங்கள பௌத்த தேசியக் கொடியாகவே ஆகிவிட்டது. கண்துடைப்புக்காக இருக்கும் பச்சை, செம்மஞ்சள் கோடுகளையும் கூட நீக்கிவிடும்படி மிரட்டிவருகின்ற பேரினவாதத்தின் தொடர் போராட்டம் இன்னும் பல தசாப்தங்களுக்கு தொடரும் என்றே கணிக்க முடிகிறது.

சிங்கள பேரினவாத சக்திகள் சமீப காலமாக சமூக ஊடகங்களை கையகப்படுத்தி வருகிறார்கள். ஆயிரக்கணக்கான சமூக வலைத்தளங்களை தமது பிரசாரத்துக்கு பயன்படுத்தி வருவதுடன் அவர்களின் அரசியல் எதிரிகளின் வாதங்களை முறியடிக்க அவற்றை பாரிய அளவு பயன்படுத்திவருவதை காணக்கூடியதாக இருக்கிறது. தேசியக் கொடி விடயத்திலும் கூட இனவாத தரப்பை நியாயபடுத்தும் பிரச்சாரங்களே இணையங்களில் அதிகம் தேடிப் பெறக்கூடியதாக இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. ஓரிரு நாட்களுக்கு முன்னர் சிங்கக் கொடியின் ஆணுறுப்பிலுள்ள இரண்டு பந்துகளையும் செம்மஞ்சள், பச்சை நிறமூட்டி அதையே தேசியக் கொடியாக பரிந்துரைப்பதாக சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தது.

நிறுவனமயப்பட்ட பேரினவாத நிகழ்ச்சிநிரலுக்கு காலத்துக்கு காலம் வெவ்வேறு நபர்களும், அமைப்புகளும் மாறி மாறி தோன்றி தலைமை தாங்கி வந்திருக்கின்றன. பேரினவாதத்தின் நிகழ்ச்சிநிரலில் மாற்றங்கள் இருக்காது, அதன் மூலோபாயத்தில் மாற்றமிருக்காது. அதன் வீரியத்தின் அலைவரிசை சற்று மேலும் கீழும் ஏறி இறங்கியிருக்கிறது. அதன் பாய்ச்சலின் வடிவம் மாற்றங்களைக் கண்டிருக்கிறது. ஆனால் அதன் பண்பில் அதன் உறுதியில் மாற்றம் கண்டதில்லை என்பதை வரலாறு நமக்கு கற்றுத் தந்திருக்கிறது.
நன்றி - தினக்குரல்

மலையக மக்களுக்கான “பசுமை பூமி” திட்டம் - பா.திருஞானம்


மனிதனின் அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை, உறையுள் என்பவற்றில் ஒரு தனி மனிதனின் இருப்பிடம் அவனது வாழும் உரிமையினை கட்டாயப்படுத்தி நிற்கின்றது. ஓர் அரசின் எல்லைக்குள் தான் நினைக்கும் எந்த ஓர் இடத்திலும் அவன் வாழ்வதற்கான உரிமை உண்டு. ஆனால் இவ்வுரிமை தோட்ட மக்களின் வாழ்கையில் முழுமையாகக் கிடைக்கின்றதா? என்று கேட்டால் அது கேள்விக் குறியாகவே உள்ளது.

தோட்ட மக்களின் வாழ்க்கை வரலாற்றுப் பாதை மலர்கள் தூவிய பாதையல்ல. கரடு முரடான கற்கள், முட்கள் நிறைந்த பாதையாகும்.1815ஆம் ஆண்டு காலப்பகு தியில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த இவர்கள் தேயிலை, தென்னை, இறப்பர் போன்ற பயிர்ச் செய்கையில் ஈடுபட்டனர். அக்காலப்பகுதியில் அனைத்து தோட்டங்களிலும் லயன் காம்பிராக்களே காணப்பட்டன. இது 10 x 12 காம்பிராவும் ஒரு குசினியும் ஒரு வராந்தாவும் கொண்டது. இதுவே இவர்களின் காணியாகவும், வீடாகவும் இருந்து வந்தது.

இவ்வாறான நிலையிலேயே மலையக மக்கள் தற்போதும் 460 தோட்டங்களில் காணி உரிமை, வீட்டு உரிமை மற்றும் முகவரி அற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்த 200 ஆண்டு காலப்பகுதியில் தோட்ட மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இடைப்பட்ட காலப்பகுதியில் பல அரசியல் மாற்றங்களினால் நாடற்றவர்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு இந்தியா சென்றவர்களும் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். பிரித்தானிய அரசாங்கத்தினால் முற்றிலும் அடிமைகளாக அழைத்து வரப்பட்ட தோட்ட மக்கள், இன்னமும் அதே நிலையில் வாழ்ந்து வருகின்றமை வேதனைக்குரியது.

1985 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த அரசாங்கம் நாடற்ற மலையக மக்களுக்கு ஒரு சத்தியக் கடதாசியை வழங்கியதன் மூலம் இலங்கையர் என்ற பிரஜா உரிமையை வழங்கியது. அதனூடாகவே தற்போது தோட்ட மக்கள் இலங்கையர் என்ற அந்தஸ்தைப் பெற்றனர். அன்றிலிருந்தே தோட்ட மக்களின் காணி, வீட்டு உரிமைபற்றி பேசப்பட்டு வருகின்றது.

ஆரம்ப காலத்தில் பெருந்தோட்டக் காணிகள் அனைத்தும் அரசின் பொறுப்பிலேயே காணப்பட்டன. இக்காணிகளில் விவசாயத்திற்கு உதவாத ஒதுக்கப்பட்ட இடங்களிலேயே தொழிலாளர்களுக்கான வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. சில குடியிருப்புகள் மிக நீண்ட தூரத்தில் தொழிலாளர்கள் வேலைக்கு தேயிலைமலைகளுக்கு செல்லக்கூடிய வசதிக்கு ஏற்ப அமைக்கப்பட்டன. 1992ஆம் ஆண்டிலிருந்து இக்காணிகள் சுமார் 23 கம்பனிகளுக்கும் அரச பெருந்தோட்டம் (SLPC), மக்கள் பெருந் தோட்ட அபிவிருத்தி சபை (JEDB) போன்ற வற்றின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இலங்கையில் காணப்படும் பெரும்பாலான காணிகள் தனியார் வசமே உள்ளன. ஆனால் பெருந் தோட்டங்களை பொறுத்தவரையில் 80% காணிகள் அரசாங்கத்திற்கு சொந்தமானது. இந்நிலையில் தோட்ட மக்களுக்கு கடந்த அரசாங்கங்கள் காணி உரிமையை முறையாகப் பெற்றுக் கொடுக்காதது வேதனைக்குரிய விடயமாகும்.

இன்றும் தோட்டத் தொழிலாளர்களின் அடிமை சின்னமாக லயன் குடியிருப்புக்கள் காணப்படுவது வேதனைக்குரிய விடயமாகும் இந்நிலையில் சுமார் 200 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இவர்கள் இப்பிரதேசத்திலேயே வாழ்ந்து வரும் வேளையில் அவர்களுக்கெனக் காணி உரிமை வழங்கப்படவில்லை.

மலையகத் தோட்டப் புறங்களில் 1.5 மில்லியன் தோட்ட மக்கள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஒரு வீட்டில் 05 பேர் கொண்ட குடும்பம் என்று எடுத்தால் சுமார் 3,00,000 வீடுகளுடன் காணி தேவை. தற்போது இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவற்றில் வீடு உள்ளவர்களை கழித்து தற்போதைக்கு 1,85,000 வீடுகள் தேவை. அண்மைக்காலமாக மலையகத்தில் பல வீடமைப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதில் 07 பேர்ச் காணி, மாடி வீட்டுத் திட்டம், இலங்கை அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படும் கிராம வீடமைப்புத் திட்டம், தோட்ட வீடமைப்புத் திட்டம் போன்றவை நடைமுறையில் காணப்பட்டாலும், கடந்த அரசாங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்ட 7 பேர்ச் வீட்டுத்திட்டம் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ளது. வீடுகள் நெருக்கமாக உள்ளதால் மக்களின் ஏனைய தேவைகளுக்கு போதிய இடமில்லை.

ஒரு வீட்டின் கழிவுகள் இன்னொரு வீட்டுக்குச் செல்கின்றது. இதனால் சுகாதார சீர்கேடு, மண்சரிவு அபாயங்களில் ஒரு வீடு இன்னொரு வீட்டில் விழுகின்றமை. இவ்வாறான சம்பவங்கள் அண்மைக்கால மண் சரிவுகளின் போது அதிகமாகவே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. வீடுகள் கட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபை ஒரு தொகை பணத்தையும், தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியை அடைமானமாக வைத்து ஒரு தொகை பணமும் வழங்கப்பட்டு வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணம் முறையாக மக்களிடம் போய் சேராத தினால் கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான வீடுகள் பூர்த்தியாகாமல் காணப்படுகின் றன. இந்த மக்கள் தங்கள் சொந்தப் பணத் தில் இன்னொருவரின் காணியில் வீடுகளை அமைக்கின்றார்கள். வீட்டு உரிமை இருந்தாலும் அவரகளுக்கான காணி உரிமை கிடைக்குமா? என்பதுதான் கேள்விக் குறியாக இருக்கிறது.

தற்போது நடைமுறையில் காணப்படும் வீடமைப்புத் திட்டங்கள் சுய உதவி வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக சேமலாப நிதியை பிணையாகக் கொண்ட கடன் ஊடாக அமைக்கப்படுகின்றன. சில வங்கி உதவிகளுடன் அமைக்கப்பட்டு வருகின்றன. அதே வேளை உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி, மத்திய வங்கி, அரச முதலீட்டு வங்கி கடன், பெருந்தோட்ட அபிவிருத்தி நிதியம், தேசிய வீடமைப்பு அதிகார சபை மற்றும் அரச சார்பாற்ற நிறுவனங்கள் மூலமாகவும் வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் தற்காலிக கூடாரங்களில் 25,000 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலைமை நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு இக்காணி உரிமை கிடைக்காதது வேதனைக்குரிய விடயமாகும். தோட்டங்களினாலும் அரசாங்கத்தினாலும் உரித்துடன் காணிகள் வழங்கி இலவசமாக வீடுகள் அமைத்துக் கொடுக்க வேண்டிய நிலையில் இவ்வாறு செயற்படுவது வேதனைக்குரிய விடயமாகும்.

கம்பனித் தோட்டங்களில் ஓரளவு இவ்வாறான வீடமைப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவை முறையாக இடம்பெறவில்லை. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் சில தோட்டங்களில் இவர்களுக்கான காணித்துண்டுகள் ஒதுக்கபட்ட போதும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவில்லை. சில இடங்களில் காணி த்துண்டுகள் ஒதுக்கப்படவும் இல்லை. அவ்வாறு வழங்கினாலும் போதிய வசதி உள்ள இடமாக இல்லை.

கட்டப்பட்ட வீட்டை சுற்றி போதிய வசதி இல்லாமையால் இவற்றின் ஏனைய தேவைகளை செய்து கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளது. அத்துடன் மின்சாரம், நீர் போன்றவை கிடைக்கப்பெறவும் இல்லை. ஸ்ரீலங்கா பெருந்தோட்ட யாக்கம் (SPC), மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை (JEDB) போன்றவற்றில் இச்செயற்பாடுகள் கேள்விக்குறியாகவே காணப்படுகின்றன. லயன் குடியிருப்புகளுக்கு கூட 100 வருடங்களாக தகரங்கள் மாற்றப்படாத நிலையில் மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவர்களுக்கும் முறையாகக் காணி உரித்துடன் காணிகள் வழங்கவும் கிராம திட்டத்தின் கீழ் தனித்தனி வீடுகள் அமைக்க ஏற்பாடுகள் தேவை.

தோட்டங்களில் வேலை செய்து ஒய்வு பெற்றோருக்கும் படித்துவிட்டு உயர் தொழிலுக்காக எதிர்பார்த்து இருப்போருக்கும், நோயாளர்களுக்கும், வலது குறைந்தோருக்கும், தோட்டத்தில் இருந்து கொண்டு வெளியில் வேலை செய்பவர்களுக்கும் வீடுகளோ காணிகளோ கிடைப்பதில்லை.

கேட்டால் தோட்டத்தில் வேலை இல்லை என்கின்றார்கள். அவ்வாறாயின் இவர்களின் வீட்டு உரிமை, காணி உரிமை சம்பந்தமான பிரச்சினை எப்போது தீரும். அதேபோல் தோட்ட சேவையாளர்களுக்கும் இந்நிலைமையே. அவர்களின் தோட்ட சேவைக் காலம் முடிந்ததும் தோட்டத்தை விட்டு சென்றுவிட வேண்டும். இவ்வாறு மலையகம் சார்ந்த மக்கள் தங்களது காணி உரிமையையும் வீட்டு உரிமையையும் பெற்றுக்கொள்ள பல இன்னல்களையும் பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

பெருந்தோட்ட மக்களின் காணி மற்றும் வீட்டுப் பிரச்சினைக்கு புதிய அரசாங்கம் முன்வைத்துள்ள நடவடிக்கை தான் என்ன? தோட்ட மக்களுக்கும் ஏனைய மக்களுக்குப் போல் தங்களது முகவரியை தடம்பதித்துக் கொள்ள எடுத்த முயற்சிதான் என்ன? இலங்கையில் உள்ள ஒவ்வொருவருக்கும் கடிதம் ஒன்றை அனுப்ப வேண்டுமானால் விலாசமும் வீட்டு இலக்கமும் இருக்கின்றது. ஆனால் தோட்ட மக்களுக்கு இல்லை. இந்த நிலையில் தோட்ட மக்களின் முகவரி தொடர்பாக நல்லாட்சியில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை தான் என்ன?

மலையக மக்களின் காணி உரிமையை யும் தனி வீட்டு உரிமையையும் மையப் படுத்தி அந்தந்தச்சந்தர்ப்பங்களில் பலர் பல வேலைத்திட்டங்களை முன்வைத்துள்ளனர். அந்தவகையில் இலங்கையின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜயவர்தன 1977ஆம் ஆண்டு தோட்ட மக்களின் 7 பேர்ச் காணி தனி வீட்டுத்திட்டத்தை முன்னெடுத்தார்.

அதனை தொடர்ந்து காமினி திசாநாயக, 2ஆவது நிறைவேற்று ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாசவும் காணி உரிமையுடன் மலையக மக்களின் வீட்டு உரிமை தொடர்பான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தனர் நுவரெலியாவில் அதற்கான உரித்து வழங்கும் நிகழ்வினையும் நடத்தினார். அச்சந்தர்ப்பத்தில் அமைச்சராக இருந்த சௌமியமூர்த்தி தொண்டமான் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இருந்தும் காணி உரித்துடன் தனி வீட்டுத்திட்டம் வெற்றியளித்ததாக இருக்கவில்லை.

மலையக வரலாற்றில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் மலையகத்தின் தோட்ட மக்களுக்கு தனி வீடும், காணியும் என்ற செயற்பாட்டிற்கு அமைய பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன்படி தற்போது மலையகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இருந்தும் இந்த வீடுகளுக்கும், காணிகளுக்கும் உரித்துகளை வழங்குவதில் பல சிக்கல்கள் காணப்பட்டன. தற்போதும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் மூலம் தனி வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் 2ஆவது நிறைவேற்று ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, 3ஆவது ஜனாதிபதி டீ.பி. விஜயதுங்க, 4ஆவது ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க ஆகியோருடன் இணைந்து மலையக மக்களின் காணி, வீட்டு உரிமை, தொடர்பில் குரல் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

1995ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது 4ஆவது ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க ஆட்சி அமைப்பதற்கு எத்தனித்தபோது குறைவாக இருந்த ஆசனத்தை பெரும் நோக்கில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் ஸ்தாபகருமான பெரியசாமி சந்திரசேகரனை நாடியபோது அவரின் கனவாக இருந்த மலையக மக்களின் கிராம செயற்றிட்டத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததிற்கு இணங்க அரசாங்கத்துடன் இணைந்து மலையக மக்களின் வீட்டுப்பிரச்சினைக்கும், காணிப்பிரச்சினைக்கும் முடிவு கட்டுமுகமாக 7 பேர்ச் காணியுடன் கிராம வீடமைப் புத் திட்டங்களை அமுல்படுத்தினார்.

தொடர்ந்து வந்த 5ஆவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆரம்பகால கட்டங்களில் இத்திட்டத்திற்கு ஆதரவளித்த அதேநேரம், மலையக மக்களின் காணியுடன் கூடிய வீடு என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போது அதற்கு அவர், தனி வீடு இல்லை மாடி வீடுதான் தீர்வு என்று கூறினார். ஏற்கனவே மாடி வீடுகள் மலையகத்தில் அமைக்கப்பட்ட போதும் அவை வெற்றி அளித்ததாக இல்லை. இச்சந்தர்ப்பத்தில் மலையக மக்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் வாதப்பிரதிவாதங்கள் வெடித்தன.

இச்சந்தர்ப்பத்தில் பூனாகல மீரியபெத்த பிரதேசத்தில் பாரிய மண்சரிவேற்பட்டு 77 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு சுமார் 37 பேர் மண்ணுடன் புதைந்து மாய்ந்தனர். இதன் பின்னர் உலகளாவிய ரீதியில் மலையக மக்களின் வீட்டுப்பிரச்சினை பேசப்பட்டது. அரசியல்வாதிகளின் பேச்சுகளுக்கு அப்பால் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு காணியுடன் தனி வீடு தேவை என்பதை ஞாபகப்படுத்தி பல போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால், மஹிந்த அரசோ அதன்பால் செவிமடுக்கவில்லை. இந்நிலையில் 6ஆவது ஜனாதிபதிக்கான தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் மலையக கட்சிகளில் ஒருசிலர் மஹிந்த அரசுடன் இணைந்து மஹிந்தவின் செயற்றிட்டத்திற்கும் பலர் மஹிந்தவிடமிருந்து விலகி மைத்திரியுடன் இணைந்து காணி உரித்துடன் மலையக மக்களுக்கு தனி வீட்டுத்திட்டத்தை நாடினர்.

அதன்படி மைத்திரி அரசு வெற்றி பெற்றதினால் இன்று மலையகத்தில் காணி உரித்துடன் தனிவீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்த சகல நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வரும் அதேவேளை, பூனாகலை மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட 77 குடும்பங்களுக்கு காணி உரித்து டன் தனி வீட்டுத்திட்டம் இலவசமாக நடை முறைப்படுத்தப்பட்டு அடிக்கல் நாட்டப் பட்டு வேலைத்திட்டம் செயற்படுத் தப்பட் டும் வருகின்றது. அது மட்டுமல்லாது, மலைகத்தில் பல்வேறுபட்ட இடங்களில் காணி யுடன் தனிவீட்டுக்கான அடிக்கல் நாட்டப்படுகின்றன.

இந்த நிலையிலேயே மலையக மக்களுக்கான பசுமை பூமி திட்டம் தொடர்பான பேச்சுக்கள் வலுவடையத் தொடங்கின. ஏற்கெனவே கடந்த காலங்களில் மலையகத்தில் இவ்வாரான பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அவ்வாரான திட்டங்கள் முறையாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்கப்படாமையினால் அவை வெற்றியளிக்க வில்லை.

எனவே இந்த பசுமை பூமித்திட்டம் வெற்றியளிக்குமா? என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் எழாமலில்லை. இருந்த போதிலும் இந்த புதிய அரசாங்கத்தின் மீது மலையக மக்கள் மாத்திரமின்றி அனைத்து பிரிவினரும் சற்று நம்பிக்கை வைத்திருப்பதை காணமுடிகிறது.

மக்கள் இந்த அரசின் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் இவ் அரசு செயற்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மலையக மக்களுக்கு காணி உரிமையு டன் வீடுகள் அமைக்கப்பட்டு அவர்களும் கிராம எழுச்சி திட்டத்தில் உள்வாங்கப்பட்டு அவர்கள் வாழும் வீட்டு, பாதைகளுக்கு பெயர், வீட்டுக்கு இலக்கம் இடப்பட்டு, கடிதங்கள் அனுப்பினால் குறித்த நபருக்கே கடிதம் கிடைக்கும் முகவரி உருவாக்கப்பட
வேண்டும். அவ்வாறு ஏற்பட்டால் அது நல் லாட்சியில் மலையக மக்களுக்கு கிடைத்த முகவரியாக கருதலாம்.

நன்றி - வீரகேசரி
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates